Tuesday 24 February 2015

ஆத்மலயம்

ஆத்மலயம்

எழுத்தாளர்: கங்கைமகன்

சூர்ய கதிர்கள் ஒருமுகப்படுகின்றபோது அது ஒரு வலுவை பெற்று ஒரு சக்தியாகி வெப்பமாகி தீயாக மாறுகின்றன அதே போல் மனித மனங்களை ஒருமுகப்படுத்தி ஒரு புள்ளியில் குவிவடைய செய்யும் போது வலிமை பெற்ற ஆன்மாவின் விடுதலை உணர்வை அவை பெறுகின்றன நான் என்னை திருத்தி கொள்வதற்காக படித்த புத்தகங்கள் அதிகம் அந்த முயற்சியில் முனைப்புதான் இந்த புத்தகம் அந்த வகையில் மனிதர்களால் இந்த உலகம் ஒரு நூல் நிலையமாக மாற வேண்டும் என்பது எனது ஆசை ஒவ்வொரு மனிதர்களின் மனோபாவங்களும் அவரவர் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கின்றனர் என்பதை நான் இந்த உலகத்தில் அனுபவரீதியாக உணர்ந்திருக்கிறேன் ஒர் ஆன்மாவின் மனதிற்குள் லயபட்டிருக்கும் நான் என்ற மையத்திலிருந்து பலவகையான உணர்வுகள் இந்த பூமிக்குள் விதைக்கப்படுகின்றன ஜம்பூதங்களின் சேர்க்கையால் நான் என்ற ஒரு மனிதன் பல ஆயிரம் சந்தர்ப்பங்களுள் இந்த பூமியில் தூக்கி எறியப்பட்டுள்ளான் அதில் குறைந்த அளவை பயன்படுத்தி இதுதான் வாழ்க்கை என்று என்னுகின்றானே தவிர இப்படியும் வாழலாம் என்று சிந்திக்க மறந்துவிடுகின்றான் இந்த புத்தகம் வாழ்க்கையின் தத்துவம் அல்ல இருண்ட வாழ்க்கை பயணத்தின் போது ஒரு சிறு வெளிச்சம் தான் இந்த உலகத்தில் என்ன இருக்கின்றது என்பதை என்னவாக இருக்கவேண்டும் என்று நாம் மாற்ற எடுத்து வரும் முயற்சியே பல பிரச்சனைகள் உருவாக காரணமாய் உள்ளது ஒருவன் தான் விரும்பும் நிலைக்கு மாற ஆசைப்படுகிறான் தன்னை உணர்தலே தான் விரும்பும் நிலை என்பதை உணர்ந்தவர்களே உயர்வடைகின்றார்கள்.....

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/aathmalayam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment