Tuesday 9 December 2014

புலிகளின் புதல்வர்கள்

புலிகளின் புதல்வர்கள் - பா.விஜய்

இந்நூலைப் படிப்பவர்களுக்கு இது வரலாற்று நாவலா? வரலாற்று நூலா? என்ற ஐயம் எழுவது இயல்பு. வழக்கமான சரித்திர நாவல்களின் எந்தத் தடையத்தையும் இந்நாவலில் காண முடியாது. 1800 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக வரலாற்றின் பின்புலத்தில் அங்கங்கே கதைகளாகவும், அங்கங்கே வரலாறாகவும் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.

சோழமன்னன் கரிகாலன் கடற்கொள்ளையர்களை விரட்டியடித்தது, உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த நெடுங்கிள்ளிக்கும் நலங்கிள்ளிக்கும் நிகழ்ந்த போர், கிள்ளிவளவன் தகடூர் மலையமானுடன் போரிட்டது. சேரநாட்டைக் கைப்பற்ற நினைத்தது என்பன போன்ற சுவையான சம்பவங்கள் நூலைப் படிப்பதை இனிமையாக்குகின்றன. அதே சமயம், தமிழக வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளும் வகையில் நூலின் பல பகுதிகளில் தரப்பட்டுள்ள தகவல்கள் பயனுள்ளவை.

உதாரணமாக, களப்பிரர் காலம் இருண்ட காலம் என்று கூறப்படுகிறது. ஆனால் களப்பிரர் காலத்தில்தான் பிராமியில் இருந்து தமிழ் எழுத்துகள் வட்டெழுத்துகளாக மாறின, ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு பாவினங்கள் தோன்றின. களப்பிரர்கள் தமிழ் சமூகத்தைச் சிதைத்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இருக்கிறது என்கிறார் நூலாசிரியர்.

""கரிகாலன் இமயம் சென்றது புனைவுக் கதையன்று. சிக்கிம் மாநிலத்தின் திபெத் (சீனா) பகுதிக்குத் செல்லும் வழியாகத் திகழும் சூம்பிப் பள்ளதாக்கினை ஒட்டிய சோழமலைத் தொடர் இன்றும் உள்ளது (இட்ர்ப்ஹ தஹய்ஞ், இட்ர்ப்ஹ ல்ஹள்ள்) எனும் பகுதிகளே அவை''. இப்படிப்பட்ட அரிய தகவல்கள் நூல் முழுக்க உள்ளன.

வரலாற்று ஆர்வலர்களின் பார்வையில் தெளிவையும், வலிமையையும் ஏற்படுத்தும் நூல்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/puligalin-puthalvargal.htm


தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment