Saturday 20 December 2014

பிறகு

பிறகு கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி வாசகனை அந்தக் கிராமத்தின் எல்லைகளைக் கடந்து அழைத்துச் செல்கிறது. வறுமை சூழ்ந்த இந்தியக் கிராமங்களின் பொது அடையாளம் குறித்த முப்பரிமாணச் சித்திரமொன்றை வரைந்து காட்டுகிறது. கரிசல் வாழ்வின் சகலக் கூறுகளையும் அதன் அடையாளங்களைச் சிதைக்காமல் கலைப்படு்த்தியிருக்கும் பூமணிஈ காலத்தாலும் வரலாற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட அந்த எளிய மனிதர்களின் வாழ்வைப் பரிவோடும் ஆற்ற முடியாத துயரத்தோடும் சொல்லிச் செல்வதோடு காலத்தின் மீதும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் மீதும் கூர்மையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். நாவலின் கதைவெளியிலும் பாத்திரங்களின் சுதந்திரத்திலும் குறுக்கிடாமல் இதைச் சாத்தியப்படுத்தும் கலைநுட்பம் பூமணிக்கு வாய்த்திருக்கிறது

                                          தேவிபாரதி

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க

http://www.udumalai.com/piraku.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment