Friday 21 November 2014

அ.முத்துலிங்கம் கதைகள்


நவீன உலகம் ஓர் ஒற்றைப் பிராந்தியமாக சுருங்கி வருகிறது. மானுடம் ஒற்றை இனமாக ஆகலாம் - இன்று இது ஒரு கனவாக இருப்பினும். நவீன வாழ்வு தன் அபரிமிதமான வசதிகள் மூலம் உலகையே நாடாகக் கொண்ட ஒரு கதைபாடிக் குலத்தை உருவாக்கலாம். மண்ணெல்லாம் அலைந்து அவர்கள் மானுடத்தின் கதையைப் பாடலாம். இன்று நாம் அதற்குப் போக வேண்டிய தூரம் மிக அதிகம்தான். ஆயினும் அதற்கு முதற்பட்ட முன்னுதாரணமாக ஆகும் சில எழுத்தாளர்களையாவது இன்று நாம் உலக இலக்கியத்தில் இருந்து காட்டமுடியும். தமிழில் அ.முத்துலிங்கத்தின் எழுத்தில் அதற்கான கூறுகள் உள்ளன என்று படுகிறது. அதுவே அவரது முதற்சிறப்பாகும் - முன்னுரையில் ஜெயமோகன்

No comments:

Post a Comment